கும்பம் ராசி அன்பர்களே..!! இன்றைய நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் சிறப்பாக இருக்கும். வாழ்க்கையை இன்று நீங்கள் முன்னேற்ற பாதையை நோக்கி எடுத்துச் செல்வீர்கள். வாழ்க்கையில் இன்று நீங்கள் புதிய திருப்பங்களை சந்திக்க கூடும். இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி இருக்கும். லாபத்திற்கு எந்தவித குறையும் இருக்காது. புதிய ஆர்டர்கள் கிடைப்பது மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வெற்றி வாய்ப்புகளை குவிக்க முடியும். இருந்தாலும் கூடுதல் உழைப்பு மட்டும் இருக்கும் பார்த்துகொள்ளுங்கள். எந்த ஒரு வேலையையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படுங்கள். பெரியவரிடம் ஆலோசனை கேளுங்கள். இன்று நண்பர்கள் மூலமும் ஆதாயமும் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கும் கலகலப்புக்கும் எந்தவித குறையும் இருக்காது.
கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். உங்களுடைய செயல் திறமை இன்று கூடும். அது போலவே தொழிலுக்காக நீங்கள் கேட்ட இடத்தில் பணம் உங்களுக்கு வந்து சேரும். இன்றைய நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றி இருக்கும். ஆதரவின்றி தவிர்ப்பவர்களுக்கு ஆதரவு கொடுத்து மகிழ்வீர்கள். அதாவது தானம் தர்மம் போன்ற காரியங்களில் ஈடுபடுவீர்கள். உங்களுக்கு செல்வாக்கு உயரும். இருந்தாலும் இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு மிகவும் சிறப்பான நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அதுபோலவே விநாயகரை இன்று மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள் அது போதும். வெற்றி வாய்ப்புகளை நாம் குவிக்க முடியும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்