Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “சாதிக்கும் திறமை இன்று இருக்கும்”.. வாக்கு கொடுக்க வேண்டாம்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களுக்கு சுமாரான நாளாகத்தான் இருக்கும். கூடுமானவரை ஆலயம் சென்று வாருங்கள் அது போதும். ஆலயவழிபாடு உங்கள் மனதை நிம்மதி கொள்ள வைக்கும். சுக சௌக்கியத்திற்கு பங்கம் கொஞ்சம் விளையும். எதிர்பார்த்த இடங்களில் பணவரவு தாமதப்பட்டு தான் வந்து சேரும். எதையும் சாதிக்கும் திறமை இன்று இருக்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்துப் பேசி விரோதத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை கொடுக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேருவீர்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும். எதிலும் வேகமாக செல்லவேண்டும் என்ற எண்ணம் தோன்றும். யாருக்கும் எந்தவிதமான சாட்சிக் கையெழுத்து போடவேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை வாக்குறுதிகளையும் கொடுக்க வேண்டாம் கவனம் கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை கூடுமானவரை எழுதிப் பாருங்கள்.

இன்று சக மாணவரிடம் பழகும் போது நிதானமாக பழகுங்கள். ஒற்றுமை மேலோங்குவது மிகவும் நல்லது. இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய கர்மங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் :  1 மற்றும் 7

அதிர்ஷ்டநிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |