கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். வாரிசுகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். தொல்லை தந்த வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவது பற்றி சிந்தனை மேற்கொள்வீர்கள். வியாபார விரோதங்கள் விலகி செல்லும். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறிய வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும் நாளாக இருக்கும். சக கலைஞர்கள் மூலம் சில தொந்தரவுகள் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள்.
கலைப்பொருட்கள் விற்பனைத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கும் நல்ல லாபம் இன்று கிடைக்கும். இன்று மற்றவர்கள் விஷயத்தில் மட்டும் தலையிடாமல் இருந்தால் அது போதும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாக இருக்கும். அதுபோலவே இன்று சிவன்ராத்திரி அதாவது குபேர கிரிவலம் என்று சொல்வார்கள். குபேரர் பூமிக்கு வந்து திரு.அண்ணாமலையாரை தரிசித்து விட்டு கிரிவலம் செல்லும் நாள்.
இந்த கிரிவலம் செல்லும் நாளில் நாமும் குபேரர் உடன் கிரிவலம் சென்றால் நம்மளுடைய ஏழு தலைமுறைக்கும் செல்வ செழிப்பாக வாழலாம் என்பது ஐதீகம். ஆகையால் கூடுமானவரை நாம் அனைவரும் இன்று கிரிவலம் சென்று குபேரரையும் திரு. அண்ணாமலையாரையும் தரிசித்து நம்முடைய செல்வச் செழிப்பை உயர்த்திக்கொள்ளலாம். அப்படி கிரிவலம் செல்ல முடியாதவர்கள் மாலை 4 மணியிலிருந்து 6 : 30 மணிக்குள் குபேரர் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். செல்வ செழிப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்