Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… ‘சோதனைகளையும் சாதனைகளாக மாற்றுவீர்கள்”.. மற்றவர்களிடம் நல்ல மதிப்பு கூடும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்றைய நாள் உங்களுக்கு கொஞ்சம் சுமாரான நாளாகத்தான் இருக்கும். சோதனைகளையும் சாதனைகளாக இன்று மாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரம் விருத்தியாக கடினமாக உழைப்பீர்கள். இன்று மாணவர்கள் படிப்பில் மட்டும் கூடுதல் கவனம் இருக்கட்டும். இன்று வசிக்கும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.

தேவையான வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகிச்செல்லும். தேவையான நிதியுதவி கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடும். அந்த பயணம் அலைச்சலை கொடுப்பதாகத் தான் இருக்கும். மன திருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்தி சாதுரியம் மூலம் காரிய வெற்றி ஏற்படும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் நல்ல மதிப்பு கூடும்.

இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். இன்று சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |