Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “சூழல்களை உணர்ந்து செயல்படுங்கள்”.. வாக்குவாதங்களும் செய்யவேண்டாம்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று அவசர பணியால் சிரமம் கொஞ்சம் ஏற்படலாம். சூழல்களை உணர்ந்து செயல்படுங்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெறுவதற்கு கூடுதலாக தான் உழைக்க வேண்டியிருக்கும். திடீர் செலவால் சேமிப்பு கரையும். வாகனத்தில் மித வேகத்தை  பின்பற்றுங்கள். இது தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டியிருக்கும். காரியங்கள் ஓரளவு சாதகமாகத்தான் இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் உங்களுக்கு கிடைக்க கூடும். லாபம் சராசரி அளவில் இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் கொஞ்சம் சிக்கல்கள் இருக்கும்.

அவர்களிடம் எந்தவிதமான வாக்குவாதங்களும் செய்யவேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அதனால் நீங்கள் கோபப்பட கூடும். உடல் சோர்வடைய கூடும். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களின் உதவிகள் மட்டும் உங்களுக்கு கிடைக்கும். அந்த விஷயத்தில் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். அதுமட்டுமில்லாமல் மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள். பாடங்களில் கவனத்தை செலுத்துங்கள் விளையாட்டை ஏறக்கட்டி விட்டு பாடத்தில் முழு கவனத்தை செலுத்துவது மிகவும் நல்லது.

அது போலவே இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். இன்று தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்தால் உங்களுடைய கர்மதோஷங்கள் அனைத்தையும் நீக்கி செல்வ செழிப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |