கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று சமயோசிதமாக செயல்படுவீர்கள். முக்கிய பணிகள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று முயற்சிகள் யாவுமே வெற்றிபெறும். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது மட்டும் நல்லது கூடுமானவரை பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.
தொழில் வியாபாரம் நிதானமாக தான் நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆடர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன்களைக் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை கொஞ்சம் சந்திக்க வேண்டியிருக்கும். அலுவலகப் பணிகள் மூலம் டென்ஷன் ஏற்படும். கவனமாகப் பேசுவது எப்போதுமே நல்லது. இன்றைய நாள் ஓரளவு சிறப்பு இருக்கும். தனவரவு இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கொஞ்சம் படியுங்கள்.
படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள். அப்பொழுது தான் படித்த பாடத்தை நினைத்து வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று வெளியில் செல்லும்பொழுது நீங்கள் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் அதிஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 6 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் வெளிர் நீல நிறம்