Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “புது வாய்ப்புகள் தேடி வரும்”.. தடைகள் உடைபடும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் அனைத்துமே நீங்கும். நிலுவையாக இருந்த வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தடைகள் உடைபடும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று உத்தியோகத்தில்  இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலனைக் கொடுக்கும்.

உறவினருடன் அனுசரித்துச் செல்வதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும்  மிகவும் நல்லது. இன்று கூடுமானவரை செய்யும் காரியங்களை நிதானமாகவும் பொறுமையாகவும் செய்யுங்கள். மற்றவர்களுக்கு வாக்குறுதிகள் எதுவும் கொடுக்காதீர்கள். அதுமட்டுமில்லாமல் பஞ்சாயத்துகள் ஏதும் செய்யாதீர்கள். இதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று மாணவக் கண்மணிகள் கல்வியில் நல்ல சிறப்பை அடையக்கூடும்.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். சக மாணவரின் ஒத்துழைப்பும் இருக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |