கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று நாணயத்தை காப்பாற்றும் நாளாக இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலை உங்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பார்கள். நடைபெறாது என்ற காரியம் சிறப்பாக நடைபெறும். மதிய நேரத்திற்கு பின் மங்களகரமான செய்திகள் வந்து சேரும். இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நிலவி வந்த போட்டிகள் விலகிச்செல்லும். உங்களுடைய பேச்சு மற்றவர்களை கவரும் விதமாகவே இன்று இருக்கும். அனுகூலமான பலன்கள் இன்று கிடைக்கும். தனவரவு சிறப்பாகவே இருக்கும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்ப்புகளும் இன்று விலகிச் செல்லும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்