Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “தனித்திறமையை இன்று வெளிப்படுத்துவீர்கள்”.. தாமதமான பணி எளிதாக நிறைவேறும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! உங்களின் தனித்திறமையை இன்று வெளிப்படுத்துவீர்கள். தாமதமான பணி ஒன்று இன்று எளிதாக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி விற்பனை வியத்தகு அளவில் இருக்கும். புத்திரர்கள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த அளவு இருப்பது மட்டும் கடினம். மேலிடத்தின் கனிவான பார்வையால் குதுகலம் பெறுவீர்கள். இன்று மனமகிழ்ச்சி இருக்கும். குடும்பத்தில் உங்களுக்கு ஒற்றுமை இருக்கும்.

வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் கழிக்க கூடிய சூழல் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று விருந்து விழாக்களில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். நிலுவையில் உள்ள பணம் கூட உங்கள் கையில் வந்து சேரும். இன்றையநாள் நீங்கள் மனமகிழ்ச்சி கொள்ளும் நாளாக இருக்கும். அது மட்டுமில்லாமல் மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஆர்வம் மிகுந்து இருக்கும்.

நல்ல முன்னேற்றம் இருக்கும் இருந்தாலும் படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள், சிறப்பாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |