கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று மகிழ்ச்சி பெருக சிவ பெருமானை மனதார வழிபட வேண்டிய நாளாக இருக்கும். தொலைபேசி மூலம் பொன்னான தகவல்கள் வந்துசேரும். பொதுவாழ்வில் மதிப்பும் மரியாதையும் உயரும். வெளிநாட்டு முயற்சி கைகூடும். இன்று மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் மறைந்து மகிழ்ச்சியான சூழ்நிலை இன்று நிலவும். குடும்பத்தில் கலகலப்பு காணப்படும்.
வாழ்க்கை துணை உங்களை அனுசரித்துச் செல்ல கூடும். அக்கம்பக்கத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். மனதில் இருந்த கவலைகள் அனைத்தும் நீங்கும். அதுமட்டுமில்லாமல் இன்று உடலில் வசீகர தன்மை கூடும். காதலில் வயப்பட கூடிய சூழல் இருக்கும். திருமண முயற்சிகள் வெற்றிகரமாக நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் பிறக்கும். இன்று மாணவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும்.
சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். சக மாணவரின் ஒத்துழைப்பும் இன்று இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்தும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்