Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு…”அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் கிடைக்கும்”… எந்தவித வாக்குறுதிகளும் கொடுக்க வேண்டாம்….!!

கும்ப ராசி அன்பர்களே…!!  இன்று அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். ரொம்ப நாளாகவே இருக்கும் பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஆடை ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டை விரிவுபடுத்தும் முயற்சி வெற்றியை கொடுக்கும். இன்று கலைத்துறையினருக்கு டென்சன் கொஞ்சம் ஏற்படும். உடன் இருப்பவரிடம் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம் விட்டு பேசுவது ரொம்ப நல்லதாக இருக்கும். அதுபோலவே இன்று யாரிடமும் எந்தவித வாக்குறுதிகளும் நீங்கள் கொடுக்க வேண்டாம்.

எதிலும் திருப்தி  இல்லாதது போல் தோன்றும். மனம் கொஞ்சம் அலைபாய கூடும். தேவையில்லாத விஷயங்களில் நாட்டம் செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள், கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று கணவன்-மனைவிக்கிடையே சின்ன சின்ன பூசல்கள் இருக்கும். அதை பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. பணவரவு ஓரளவு சிறப்பை கொடுக்கும். மற்றபடி இன்று பொறுமையை மட்டும் கையாளுங்கள் அது போதும்.

இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இருந்தாலும் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம்  உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் சனீஸ்வர பகவானுக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பு ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும்  7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |