கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக அலைய வேண்டியிருக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக ஊழியர்களால் உதவிகள் இருக்கும். உற்பத்தி துறையில் உள்ளவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் கைகூடிவரும். உங்களுடைய வாழ்க்கை துணை மூலம் நன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். எடுத்த செயலை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். இன்று பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
கொடுத்த வாக்கை நிறைவேற்றி சமூகத்தில் நல்ல அந்தஸ்தும் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. குடும்பத்தைப் பொறுத்தவரை அன்பு இருக்கும். ஒற்றுமை நீடிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தினரின் அன்பும் உங்களுக்கு கிடைக்கும். இன்று அனைவரின் ஆதரவால் முக்கியமான பணியும் நிறைவேற்றுவீர்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும். எடுக்கக் கூடிய விஷயங்கள் அனைத்தும் திறமையாக செய்து முடித்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துமே சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்