கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாளாக இருக்கும். தாமதப்பட்ட காரியங்களள் இன்று துரிதமாக நடைபெறும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த பணவரவு சிறப்பாக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது மட்டும் கவனமாக செல்லுங்கள். இன்று வீண் செலவுகள் கட்டுப்படும். சேமிப்பு அதிகரிக்கும். எந்த ஒரு வேலையை செய்து முடிப்பதிலும் இருந்த தடை தாமதம் நீங்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக பாடுபடுவதையும் கொஞ்சம் தவிர்ப்பது நல்லது.
வருமானம் இருமடங்காக இருக்கும். எந்த வேலையைச் செய்தாலும் மனது திருப்தி உண்டாகும் அதுபோலவே குடும்பத்திலும் நல்ல சூழ்நிலை உருவாகும் கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று மற்றவர் இடமும் நீங்கள் அன்பாக நடந்து கொள்வீர்கள். அதுபோலவே இன்று உடலில் வசீகரத் தன்மை கூடும் காதல் வயப்பட கூடிய சூழல் இருக்கும். ஆனால் இன்று நீங்கள் செய்வது வாகனத்தில் செல்லும்போது திரும்ப காண செல்ல வேண்டும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களிலும் ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
வாக்குறுதிகள் கொடுக்கக்கூடாது ஜாமீன் கையெழுத்து போட கூடாது .இதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ள போதுமானதாக இருக்கும். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடினப்பட்டு படியுங்கள். படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் எளிதில் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு