Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “எதிர்ப்புகள் அகலும்”.. பகை விலகி எதிலும் வெற்றி..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! செயல்களில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படலாம். கடினமான பணிகளில் பாதுகாப்பு பின்பற்றவேண்டும். தொழிலில் திட்டமிட்ட இலக்கு கால அவகாசத்தில் நிறைவேறும். கொஞ்சம் பணக்கடன் பெற நேரிடலாம். மனைவி உங்களுக்கு எப்பொழுதுமே உதவிகரமாக நடந்து கொள்வார். எதையுமே நீங்கள் கொஞ்சம் யோசித்து செய்வது மட்டும் நல்லது. இன்று கடினமாக உழைப்பீர்கள். எதையும் எதிர்பார்க்காமல் உழைப்பீர்கள். எதிர்ப்புகள் அகலும்.

பகை விலகி எதிலும் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். இன்று ஓரளவு சிறப்புமிக்க நாளாக இருக்கும். மாணவர்கள் இன்று கல்வியில் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள். விளையாட்டை ஏறக்கட்டி விட்டு கல்வியில் ஆர்வத்தை செலுத்துங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது  இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் :  1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |