Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள்”.. திருமணம் கை கூடும்..!!

கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று நிம்மதி கிடைக்க நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். நீண்டநாள் நண்பரின் உதவி உங்களுக்கு கிடைக்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். உடல்நலம் மாற்று மருத்துவத்தால் சீராக இருக்கும். இன்று மற்றவருடன் விரோதம் கௌரவ பங்கம் போன்றவை ஏற்படலாம். இடமாற்றம் கொஞ்சம் இருக்கும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் கை கூடும். ஆனால் வீண் அலைச்சல் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.

மாணவர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதிகம் நேரம் படிக்க நேரம் எடுக்கவேண்டி இருக்கும். வீண் வாக்கு வாதங்களைத் தயவுசெய்து தவிர்த்து விடுங்கள். இன்று கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் எண்ண வேண்டாம். இதை மட்டும் நீங்கள் சரியாக செய்யுங்கள் அது போதும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்துமே நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |