கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று பாசமிக்க உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பல நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். தொழில் முயற்சிகளில் ஏற்பட்ட தடுமாற்றம் அகலும். நீண்ட நாளைய பிரார்த்தனை நிறைவேறும். இன்று உடல் ஆரோக்கியம் சீர்படும். எதிர்பாலினத்தவரால் லாபம் கிடைக்க கூடும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய நேரிடும். பணவரவு ரொம்ப சிறப்பாக இருக்கும்.
வீண் அலைச்சல் திடீர் கோபம் போன்றவை ஏற்படலாம்.காரிய வெற்றி ஏற்படும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். அதுமட்டுமில்லாமல் உங்களுடைய பொருளாதாரமும் இன்று உயரக்கூடிய வாய்ப்பு இருக்கும். பேச்சில் மட்டும் இன்று நிதானமாக செயல்படுவது ரொம்ப நல்லது. இன்று மாணவக் கண்மணிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் மேற்கல்விக்கான முயற்சியில் வெற்றியும் இன்று ஏற்படும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது காவி நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். காவி நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிஷ்ட நிறம் : காவி மற்றும் இளம் மஞ்சள் நிறம்