கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அரசால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். இன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லாம் தரப்பினரிடமிருந்து ஆதரவு கிடைக்கும்.
நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்னைகள் நீங்கும். அலுவலகத்தில் உங்களுடைய திறமை வெளிப்படும். சக ஊழியரிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். இன்றையநாள் ஓரளவு உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். மாணவக் கண்மணிகள் மட்டும் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். பாடங்களைப் புரிந்துகொண்டு படியுங்கள்.
சந்தேகமிருப்பின் தைரியமாக ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் ; மஞ்சள் மற்றும் அடர் நீல நிறம்