கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் இலக்கு படிப்படியாக நிறைவேறும். கொஞ்சம் கடன் பெறுகின்ற நிலை இருக்கும். கண்களின் பாதுகாப்பில் கவனம் இருக்கட்டும். இன்று கணவன் மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையை கொடுப்பதாக இருக்கும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் இருக்கட்டும். தன்னம்பிக்கை இன்று அதிகரிக்கும்.
பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். எச்சரிக்கையாக பேசுவது எப்போதுமே நல்லது. இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். எந்த ஒரு காரியத்தையும் இன்று நீங்கள் சிறப்பாகத்தான் செய்வீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் இளம் சிவப்பு நிறம்