கஷ்டத்தை தன்னுள்ளே வைத்துக்கொண்டு வெளியே சிரித்து கொண்டிருக்கும் கும்பராசி அன்பர்களே..!! இன்று உங்களிடம் பலரும் நல்ல எண்ணம் கொள்வார்கள். உற்சாக மனதுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சி இலக்கு திட்டமிட்டபடி நடைபெறும். கூடுதல் பணவரவும் கிடைக்கும்.. உறவினர் வீட்டில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே வெளியே சொல்ல முடியாத மனக்குறைகள் வரக்கூடும். பிள்ளைகள் கல்வி மற்றும் அவர்கள் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். விருப்பம் இல்லாமல் பயணம் செல்ல நேரிடும். வீண் மன சங்கடத்துக்கு ஆளாக நேரிடும். எதிலும் கவனம் இருக்கட்டும். பெண்களுக்கு திருமண பாக்கியம் கை கூடி வரும்.
இன்று நெடுங்காலமாக சந்தான பாக்கியம் கிட்டாதவர்களுக்கு வரப்பிரசாதம் இன்று கிடைக்கும். இன்றைய நாள் நீங்கள் மனம் மகிழும் நாளாகவே இருக்கும். தெய்வீக அருளை முழுமையாகப் பெற்று ஆனந்தம் கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே நீங்கள் 18-சித்தர்கள் கொண்ட ஒரு சேர புகைப்படத்தை வணங்கி வருவது நல்லது. இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்