Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு… கரியதடை உண்டாகும்… திட்டமிட்டு செயல்படுவீர்கள் …!

கும்ப ராசி அன்பர்களே …!  இன்று முறையற்ற வழியில்  பணம் வரக்கூடும்.  அந்த பண வரவை நீங்கள் கூடுமானவரை ஆலோசித்த பின்னர் ஏற்றுக் கொள்வதுதான் நல்லது. உறவுகளுக்கு இடையே மன கசப்புகள் கொஞ்சம் உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும். வழக்கை ஒத்தி போடுங்கள் மற்றவருடைய நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.  புத்திக் கூர்மையுடன் செயல்படுவதை எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும்.

எந்த ஒரு செயலையும் யோசித்து செய்யுங்கள் பின் விவகாரங்களில் தயவுசெய்து  தலையிட வேண்டாம். யாருக்கும் பஞ்சாயத்துக்கள் செய்ய  நினைக்காதீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சின்ன சின்ன தடைகள் அவ்வப்போது வந்து செல்லும். திட்டமிட்டு செய்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்ல வேண்டும். எதிர்பாராத அலைச்சல் ஏற்படும்.

செலவுகள் அதிகரிக்கும். உடல் சோர்வு கூட உடலில் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மயில்நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மயில் நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு நிறம் மற்றும் மயில் நீல நிறம்.

Categories

Tech |