கும்ப ராசி அன்பர்களே …! இன்று தொலைபேசி மூலம் பொன்னான தகவல்கள் வந்து சேரும் நாளாக இருக்கும். நண்பர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்கலாம் என்ற சிந்தனை மேலோங்கும். விடாமுயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலனைப் பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இதுவரை இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள்.
எல்லாவற்றிலும் சாதகமான பலனை உங்களுக்கு கிடைக்கும். காரியங்களும் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். அரசு மூலம் நடக்கவேண்டிய பணியில் இருந்த தொய்வுகள் நீங்கி முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இன்றைய நாள் உங்களுக்கு யோகமான நாளாக இருக்கும். பெண்களால் முன்னேற்றமான சூழ்நிலை அதேபோல பெண்களுக்கும் சிறப்பான நாளாக இருக்கும்.
அது மட்டுமில்லாமல் உங்களுடைய வசீகரமான தோற்றத்தால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு மற்றும் நீல நிறம்.