Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் நாகேஷுடன் இணைந்து நடித்துள்ள ஏ.ஆர்.முருகதாஸ்…. யாரும் கவனித்திராத காட்சி…. இணையத்தில் வைரல்….!!!

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பிரபல நடிகர் நாகேஷ் உடன் இணைந்து நடித்துள்ள படத்தின் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து வரும் ஏ.ஆர்.முருகதாஸ் அவர் இயக்கும் படங்களில் ஒரு சில காட்சிகளில் தோன்றுவார். ஆனால் அவர் படங்களை இயக்குவதற்கு முன்னதாகவே ஒரு திரைப்படத்தின் ஒரு காட்சியில் நடித்துள்ளார். அந்த படத்தின் வீடியோ காட்சியை ஏ.ஆர்.முருகதாஸ் அவர் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தவகையில் கடந்த 1997ஆம் ஆண்டு அப்பாஸ் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான ‘பூச்சூடவா’ எனும் திரைப்படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் சர்வராக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் அவர் நாகேஷ் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CPrsWY1JXI_/

Categories

Tech |