Categories
இந்திய சினிமா சினிமா

மலையாள படத்தில் நடித்து வரும் ஏ.ஆர்.ரகுமான்…. காட்டுத்தீ போல் பரவும் புகைப்படம்…!!

பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் வெளியான “ரோஜா” திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தொடர்ந்து ஏராளமான பாடல்களுக்கு இசையமைத்து உலக மக்களை தன் இசையால் கட்டி வைத்திருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இதை தொடர்ந்து இவர் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சிங்கப் பெண்ணே பாடலின் காட்சியில் ஏ.ஆர்.ரகுமான் நடித்திருந்தார்.

குறிப்பாக அவர் நடித்த முதல் படமும் இதுவே என்று கூறலாம். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் “ஆராட்டு” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திலும் பாடல் காட்சியில்தான் ஏ.ஆர்.ரகுமான் நடித்து வருகிறாராம்.மேலும் இப்படத்தை உன்னி கிருஷ்ணன் இயக்குகிறார். படப்பிடிப்பில் ஏ.ஆர்.ரகுமான், மோகன்லாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏ.ஆர்.ரகுமான், உன்னிகிருஷ்ணன், மோகன்லால்

Categories

Tech |