ஏ. ஆர். ரகுமான் தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்த அழகிய செல்பி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் ஆஸ்கார் விருது வரை சென்று இந்தியாவை பெருமைப்படுத்திய பிரபல இசையமைப்பாளர் ஆவார். எல்லா இடத்திலும் சாதாரணமாகவே இருக்கும் இவரின் குணத்திற்காகவே இவருக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனையடுத்து, இவர் இசையில், அடுத்ததாக ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியாக உள்ளது.
சமீபத்தில், இந்த படத்தின் இசை உருவாகும் விதத்தை இவர் வீடியோவாக வெளியிட்டார். இந்நிலையில், இவர் தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்த அழகிய செல்பி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.