ஏ.ஆர்.ரஹ்மானின் கனவு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “99 ஸாங்ஸ்”.இப்படம் தனது கனவு படம் என்று இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் 6 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்திருந்தார். ஏனென்றால் அவர் இப்படத்திற்கு இசை மட்டும் அமைக்கவில்லை. இப்பட கதையை எழுதியவர் இவர்தான்.
கடந்த 2015 ல் தொடங்கப்பட்ட இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தில் ஏ ஆர் ரஹ்மான் 14 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இதன் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் 99 ஸாங்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை ஏ ஆர் ரஹ்மான் அறிவித்துள்ளார்.
99 ஸாங்ஸ் .. 16 April , 2021 அன்று தமிழில் வெளியிடப்படும் என்று மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன் Directed by @vishweshk and featuring the talented actors @itsEhanBhat & #EdilsyVargas. @jiostudios @YM_Movies @idealentinc @JioCinema #99Songs pic.twitter.com/HiQ2lisfxR
— A.R.Rahman (@arrahman) March 11, 2021
அதன்படி இசையை மையமாக கொண்டு உருவாகபட்டுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி வெளியாக உள்ளது.மேலும் இப்படத்தில் எடில்ஸி, இஹான், மனீஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மானின் கனவு படத்தை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.