முகமது நபி பற்றி பாஜக தலைவர்கள் பேசிய கருத்து அரபுநாடுகளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
பாஜகவை சேர்ந்த தலைவர்கள் முகமது நபி பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியிருக்கிறார்கள். இதற்கு ஈரான், கத்தார், குவைத் போன்ற நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இது மட்டுமல்லாமல் சவுதி அரேபியா, எகிப்து, ஓமன் போன்ற நாடுகளிலும் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்திய நாட்டின் சார்பாக அரபு நாடுகளுக்குப் பதில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பாஜகவின் நவீன் குமார் ஜிண்டால், நுபுர் சர்மா ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், பாஜகவின் செய்தித் தொடர்பாளர்களான அவர்கள் இருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனை ஆசியாவிற்குரிய குவைத்தின் துணை வெளியுறவு துறை மந்திரி ஆதரித்திருக்கிறார். மேலும், ஈரான் நாட்டிற்கான இந்திய தூதர் இதற்கு வருத்தம் தெரிவித்தார். மேலும், நபிகள் குறித்து கூறப்படும் எந்த வித தவறான கருத்துக்களையும் ஏற்க முடியாது என்றார். இது மட்டுமல்லாமல் இவ்வாறான சர்ச்சைக்குரிய கருத்துக்கள் எப்போதும் இந்திய நாட்டின் கருத்துக்கள் கிடையாது. இது தனிப்பட்ட நபர்களின் கருத்து என்று கூறியிருக்கிறார்.