உலக நாடுகளில் இருக்கும் முஸ்லிம்கள் புனித தலமான மெக்காவில் அரபாத் உரை, இனி தமிழ் மொழியிலும் மொழிபெயர்க்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
முஸ்லிம்களின் புனித யாத்திரை தலமான மெக்காவின் தலைவராக இருக்கும் அப்துல் ரகுமான் அல் சுதைஸ், அரபாத் உரை மொழி பெயர்க்கக்கூடிய முயற்சியானது, தற்போது ஐந்தாம் வருடமாக தொடர்கிறது. இதற்கு முன்பு, மலாய், உருது, சீன மொழி, ஸ்பானிஷ் துருக்கிய மொழி ஆங்கிலம் பெர்சியன் மற்றும் பிரெஞ்சு போன்ற மொழிகளில் மொழிபெயர்த்து ஒளிபரப்பப்பட்டது.
இனிமேல், வங்காளம் மற்றும் தமிழ் மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்படும். அதாவது, அரபு தவிர்த்து மற்ற மொழி பேசுபவர்களும் இந்த புனித தலத்திற்கு வருவார்கள். அவர்கள் அவரவர் தாய் மொழியில் கேட்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சுமார் 20 கோடி மக்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள் என்று கூறியிருக்கிறார்.