ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர்கள் காபூலில் நடத்திய இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு கவுரவம் செலுத்தும் வகையில் அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். இதனால் அந்நாட்டில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்கும் பணியில் அனைத்து நாடுகளும் களமிறங்கியுள்ளார்கள். இதற்கிடையே ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்பு அங்கிருந்து வெளியேற நினைக்கும் பொதுமக்களை மீட்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும் என்று அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதனால் ஏராளமானோர் காபூலிலுள்ள விமான நிலையத்தின் முன்பாக குவிந்துள்ளார்கள். இதனை சாதகமாக பயன்படுத்திய ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர்கள் அப்பாவி பொது மக்களின் மீது இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இந்த பயங்கர தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உட்பட 73 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.
இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகை மேற்குறிப்பிட்டுள்ள இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொது மக்களுக்கு கௌரவம் செலுத்தும் வகையில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அமெரிக்க நாட்டின் தேசியக்கொடி ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி மாலை வரை அரைக்கம்பத்தில் பறக்கும் என்று கூறியுள்ளது.