பணத் தகராறு காரணமாக அறக்கட்டளை நிர்வாக இயக்குனரை கல்லால் தாக்கி வாலிபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அறக்கட்டளை நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ராமசாமி மகன் கருணாநிதி என்பவருக்கும், தேவேந்திரனுக்கும் இடையே அடிக்கடி பண தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கருணாநிதி தேவேந்திரனின் கார் கண்ணாடியை உடைத்ததோடு அவரை கல்லால் தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த தேவேந்திரன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து தேவேந்திரன் உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.