Categories
ஆன்மிகம் இந்து

அரக்கனாக இருக்கும் ஆண்களை அழிக்க தோன்றினாள் சப்தகன்னிகைகள்..!!

சப்த கன்னிகைகள் என்று சொல்லக்கூடிய ஏழு கன்னிமார்களின் கதை நாம் பார்க்க போகிறோம்.

பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, மற்றும் சாமுண்டி இவர்கள்தான் சப்தகன்னியர்கள் எனப்படுவார்கள். பராசக்தியின் படைத்தளபதிகளான இவர்கள் பெரும்பாலான சிவாலயங்களில் சுற்றுப் பிரகாரத்தில் அருள்பாலிப்பர் சப்தகன்னியர்கள் எனப்படும். இந்த மாதிரி கன்னியர்கள் பொதுவாக ஒரே கல்லில் வரிசையாக அமர்ந்திருப்பது போன்ற அமைப்புகள் சில இடங்களில் பார்த்தீர்கள் என்றால் தனித்து நிற்கும்.

ஆனால் இன்றைய நிலையில் அமைக்கப்படுதல் பெரும்பாலும் நம்முடைய வழக்கில் இல்லை, இருந்தாலும் இடதுகாலை மடித்து சுகாசன நிலையில் அமர்ந்து இருப்பார்கள். அவர்கள் வலது காலை தொங்கவிட்ட நிலையில் அமைந்திருக்கும். ஆகமம் மற்றும் புராணங்களில் இவர்களுக்குக் கரங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் பொதுவாக இரண்டு அல்லது நான்கு கரங்கள் மட்டுமே இவர்களுக்கு இருப்பது போல சிலையானது அமைக்கப்பட்டிருக்கும்.

மேலும் அநேக இடங்களில் பார்த்தீர்கள் என்றால் ஏழு செங்கலை வைத்து அலங்கரிக்கப்பட்டு பொங்கலிட்டு படையல் வைத்திருப்பதையும் காணலாம். அது மட்டுமல்லாமல் ஆற்றங்கரையோரம், ஏரி, குளம் என எங்கேயும் இவர்களின் சிலைகள் வழிபடும் விதமாக இருந்துவருகின்றது. ரிக் வேதம், புராணம், காளிதாசனின் குமார சம்பவம், விஷ்ணு புராணம், தேவி பாகவதம் போன்றவற்றில் அவர்களின் விவரங்கள் கூறப்பட்டிருக்கும்.

சக்தியின் அம்சமான இவர்கள் தோன்றியதன் காரணம்:

சிவபெருமான் அந்தகாசுரனுடன் போரில் ஈடுபட்ட பொழுது அந்தகாசுரனின் உடலிலிருந்து வழிந்த ரத்தத்திலிருந்து இரு அரக்கர்கள் தோன்றினார்கள். அவர்களுடைய பெயர் சண்ட, முண்ட அவர்கள் இருவரும் ஒருநாள் பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்தார்கள். ஒருநாள் அவர்களுக்கு பிரம்மன் காட்சி தந்தார். பிரம்மனிடம் இவர்கள் ஒரு வரத்தை கேட்டார்கள், அதாவது பெண்ணின் கருவில் தோன்றாத கன்னித் தன்மை வாய்ந்த ஒரு பெண்ணால் மட்டுமே தங்களுக்கு மரணம் உண்டாக வேண்டும் என்று ஒரு வரத்தை பிரம்மனிடம் கேட்க பிரம்மனும் அதே போல ஒரு வரத்தை வழங்கினார்.

ஒரு பெண்ணா நம்மை கொள்ளப் போகிறாள் என்ற தைரியத்தில் அவர்கள் இப்படிப்பட்ட ஒரு வரத்தை வாங்கி எல்லோரையும் கொடுமை செய்தார்கள். அன்னை ஆதி சக்தியின் அருளைப் பெற்ற கார்த்தியாயினி முனிவரை இந்த அரக்கர்கள் துன்புறுத்த துணிந்தார்கள் அதைப்பார்த்து கொதித்தெழுந்தாள் பராசக்தி. உடனே அந்த அரக்கர்களுடைய படையை அழிக்க கிளம்பினாள். அப்போது அரக்க கூட்டத்தை ஒழிக்க தன்னிலிருந்து 7 கன்னிகைகளை உருவாக்கினார்.

சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன், வராகமூர்த்தி, எமன் என ஒவ்வொருவரின் அம்சமாக உருவாகிய 7 கன்னியர்கள் அந்த அசுரக் கூட்டத்தை அழித்து அன்னை பராசக்தி உடைய ஆசியை பெற்றார்கள். மேலும் இந்த பூவுலகில் இந்த ஏழு கன்னிமார்களும் மக்களை காக்குமாறு சிவபெருமானால் கணிக்கப்பட்டு அவரின் அம்சமான வீரபத்திரரின் துணிவோடு அருள் புரியத் தொடங்கினார்கள். சிவாலயத்தில் பெரும்பாலும் இவர்களுடைய 7 பேரின் சிலைகளையும் நம்மால் காண முடியும்.

ஏழு கன்னிமார்களை வணங்குவது மூலமாக கிடைக்கும் நன்மைகள் :

கன்னித்தாய் பிராமி:  பிரம்மனின் அம்சமாகத் தோன்றிய இந்த கன்னி சரஸ்வதியின் அம்சமாக கல்வி கலைகளில் தேர்ச்சி பெற வேண்டுவோர், இவரை வணங்கி அருள் பெறலாம். மூளையின் செயல்களை கட்டுப்படுத்தி ஆட்சி புரிகிறாள் என்பதால் தோல்வியாதிகள் தீர்ப்பால் என்றும் நம்பப்படுகிறது .

கன்னித்தாய் மகேஸ்வரி: ஈசனின் அம்சமான இந்த அன்னை கோபத்தை நீக்கி சாந்த குணத்தை அருளக் கூடியவள். சகல பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் இந்த தேவி வடகிழக்கு திசைக்கு உரியவள். சிவனைப்போலவே தோற்றமும், ஆயுதங்களும் கொண்டவள். மகேஸ்வரியை பிரார்த்தனை செய்ததன் மூலமாக உடலில் உள்ள பித்தத்தை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டவள் என்று நம்பப்படுகிறது.

கன்னித்தாய் கௌமாரி: முருகப் பெருமானின் அம்சமாகத் தோன்றிய கன்னியவள், சஷ்டி தேவசேனா என்ற பெயர் கொண்ட இவள், குழந்தை வரம் அருளும் நாயகி, செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், வீடுமனை போன்ற சிக்கல்கள் உள்ளவர்களும் வணங்கலாம். இந்த தாய் ரத்தத்திற்கு தலைவி என்பதால் உஷ்ண சம்பந்தமான எந்த வியாதிகளுக்கும் அன்னையை வேண்டலாம் என்று நம்பப்படுகிறது.

கன்னித்தாய் வைஷ்ணவி:  திருமாலின் அம்சமாக தோன்றிய கன்னி இவள் நாராயணி என்றும் அழைக்கப்படுகிறாள். செல்வ வளம் பெறவும், உற்சாகமாக பணியாற்றவும் இவளை வேண்டலாம். விஷக்கடிகள், வீக்கம் போன்ற வியாதிகளை தீர்ப்பவள். இந்த தேவி திருமாலை போன்று சங்கு சக்கரம் ஏந்தி பக்தர்களை காப்பாள்.

கன்னித்தாய் வராகி: வராக மூர்த்தியின் அம்சமாக அவரைப்போலவே தோன்றியவள் இந்த கண்ணி. சிவன், விஷ்ணு, சக்தி ஆகியோரின் அம்சமாக இருப்பதால் பெரும் வலிமை கொண்ட இந்த தேவி எதிரிகளை வெல்லவும், தடைகளை அகற்றவும் உதவி செய்பவள். இந்த அன்னையை வணங்குபவர்களுக்கு துன்பமே வராது என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

கன்னித்தாய் இந்திராணி: இந்திரன் அம்சமாக அழகே வடிவமாகத் தோன்றிய கன்னி, மிகப் பொருத்தமான வாழ்க்கை துணையைத் தேடி தருவாள்.  இந்திராணி மகாலட்சுமி அம்சம் என்றும் போற்றப்படுகிறாள் பிரச்சினைகள் தீர இந்த அன்னை துணை நிற்பாள்.

கன்னித்தாய் சாமுண்டி: ருத்ரனின் அம்சமாக பத்திரகாளியின் வடிவமாக முதலில் தோன்றிய கன்னி இவள். எவ்விதமான தீயசக்திக்கும் கட்டுப்படாத இந்த கன்னி நம்பியவரை காக்கும் பலம் கொண்டவள். எவ்விதமான பயம் இருந்தாலும் இவளை வேண்டினாள் விலகிவிடும். வீரத்திற்கு பொறுப்பான சாமுண்டி முழு உடல் பலத்துக்கும் , நலத்துக்கும் பொறுப்பானவள்.

அன்னை ஆதிபராசக்தியின் அம்சத்திலிருந்து தோன்றி அரக்கர்களை வதம் செய்து மக்களை காக்கும் இந்த சப்த கன்னியர்கள் தமிழகமெங்கும் எல்லா இடங்களிலும் இருந்து காத்து வருகிறார்கள். பல்வேறு பெயர்களிலும் இருந்து இந்த மண்ணையும் மக்களையும் பாதுகாக்கிறார்கள். இதுவே சப்தகன்னிகள் என்று ஏழு கன்னிமார்கள் உடைய கதையாகும்.

Categories

Tech |