Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆரம்பமாகும் டிஎன்பிஎல் கிரிக்கெட் திருவிழா ….! 19-ஆம் தேதி தொடங்குகிறது ….!!!

5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 போட்டி (டிஎன்பிஎல்) வருகின்ற 19-ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 போட்டி (டிஎன்பிஎல்) வருகிற 19-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கும்  இந்த போட்டி சேலம் ,கோவை ,திண்டுக்கல் மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்தப் போட்டி முழுமையாக சென்னை சேப்பாக்கம்  எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியை நடத்த  தமிழக  அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றது.

இதையடுத்து நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி , தனது முதல் ஆட்டத்தில்  திருப்பூர் தமிழன்ஸ் அணியுடன்  20-ம் தேதி மோதுகிறது .இந்த டிஎன்பிஎல் போட்டியை காண பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .மேலும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி போட்டியை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதைதொடர்ந்து வீரர்களுக்கு கொரோனா  பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் முடிந்த பிறகு 9-ம் தேதி வீரர்கள்  சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்க உள்ளதாக  தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி தெரிவித்துள்ளார் .

Categories

Tech |