ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் போட்டியை நேரில் காண வரும் ரசிகர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாம் பாதி ஆட்டம் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதில் துபாய் அபுதாபி ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .இதில் இன்று துபாயில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி துபாய் மைதானத்தில் போட்டியை காண வரும் ரசிகர்கள் பரிசோதனையை செய்து தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் கொண்டு செல்ல அவசியமில்லை .ஆனால் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் .மேலும் சமூக இடைவெளியை பின்பற்றி கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் .அதோடு 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பு ஊசி செலுத்தி இருப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இதையடுத்து சார்ஜா மைதானத்தை பொருத்தவரை 16 வயது மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது .மேலும் தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழுடன் ,48 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட சான்றிதழை கொண்டு வரவேண்டும். அதேபோல் அபுதாபி மைதானத்தில் போட்டியை காண வரும் ரசிகர்கள் 16 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் ,தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட சான்றிதழ் மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் .அதேபோல் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் கட்டாயமில்லை. ஆனால் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதற்கான சான்றுகளைக் கொண்டு வர வேண்டும்.