Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆரம்பமாகும் புரோ கபடி லீக் ….! டிசம்பர் 22-ல் தொடங்குகிறது ….!!!

8-வது சீசன் புரோ கபடி லீக் போட்டி வருகின்ற டிசம்பர் மாதம் 22-ம்  தேதி முதல் பெங்களூரில் தொடங்குகிறது .

8-வது சீசன் புரோ கபடி லீக் தொடரானது வருகின்ற டிசம்பர் மாதம் 22-ம் தேதி முதல் பெங்களூரில் நடைபெறும் என போட்டி அமைப்பு குழு தெரிவித்துள்ளது. இதில் நடப்பு சாம்பியனான பெங்கால் வாரியர்ஸ் ,தமிழ் தலைவாஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் உட்பட 12 அணிகள் பங்கேற்கின்றன. வழக்கமாக இப்போட்டி பல்வேறு நகரங்களில் நடத்தப்படும் .ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக இம்முறை  பயோ-பபுள் நடைமுறைகளை பின்பற்றி ஒரே இடத்தில் போட்டியை நடந்த போட்டி அமைப்பு குழு முடிவு செய்துள்ளது.

இதனால் இப்போட்டி பெங்களூருவில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது .அத்துடன் இப்போட்டியை நேரில் காண பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போட்டிக்கான ஏலம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் வலிமையாக புதிய வீரர்களை தேர்வு செய்துள்ளனர். இதனால் இப்போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதோடு  இப்போட்டியை  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது .

Categories

Tech |