Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியாக வழங்கப்படுகிறதா…. பொதுமக்களின் கருத்து…. ஆட்சியரின் ஆய்வு….!!

ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்கள் சரியான எடையில் வழங்கப்படுகிறதா என பொதுமக்களிடம் கலெக்டர் கேட்டறிந்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடபொன்பரப்பி பகுதியில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கிருக்கும் தடுப்பூசி போடும் அறை மற்றும் கர்ப்பிணிகள் அறை ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து அவர் தடுப்பூசி போடுவது தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து அப்பகுதியில் இருக்கும் ரேஷன் கடைக்கு சென்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் குறித்தும், அவை சரியான எடையில் வழங்கப்படுகிறதா என்பது பற்றியும் பொதுமக்களிடம் கேட்டறிந்துள்ளார்.

Categories

Tech |