அரண்மனை மூன்றாம் பாகத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது
சுந்தர் சி இயக்கிய அரண்மனை இரண்டு பாகங்களும் அதிக வசூலை ஈட்டியதை தொடர்ந்து தற்போது அரண்மனை மூன்றாம் பாகத்தையும் எடுத்து வருகிறார் சுந்தர் சி. இதில் கதாநாயகனாக ஆர்யா மற்றும் கதாநாயகியாக ராஷி நடித்துள்ளனர்.
இவர்களுடன் சேர்ந்து ஆண்ட்ரியா, விவேக், சாக்ஷி அகர்வால், யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்களும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு சத்யா இசையமைக்க இருப்பதாகவும் கூறுகின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பானது குஜராத்தில் இருக்கும் பிரம்மாண்ட அரண்மனையில் வைத்து நடைபெற உள்ளதாகவும் இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.