Categories
சினிமா தமிழ் சினிமா

நாய் சேகர் கெட்டப்பில் அறந்தாங்கி நிஷா… அவரே வெளியிட்ட புகைப்படம்…!!!

அறந்தாங்கி நிஷா வடிவேலு நடித்திருந்த நாய் சேகர் போல் உடையணிந்த புகைப்படத்தை  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அறந்தாங்கி நிஷா விஜய் தொலைக்காட்சியில் நகைச்சுவைக்காகவே ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

இதன்பின்னர், கடந்த பிக் பாஸ் சீசன்4ல் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் மாரி 2 மற்றும் கலகலப்பு-2 போன்ற படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், வடிவேலு நடித்திருந்த நாய் சேகர் கதாபாத்திரத்தை போல் உடையணிந்து கொண்டு, புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CUedNV9h12F/?utm_source=ig_embed&ig_rid=d9d0c1f4-7ffa-4331-b0bb-7cbeaf2d31fb

 

Categories

Tech |