அரச குடும்பத்தினருக்கு வருமானம் எந்ததெந்த வழிகளில் கிடைக்கிறது என்பதை பார்ப்போம்.
உலகில் இருக்கும் அரச குடும்பங்களுக்கு என்று தனி மரியாதையும் செல்வாக்கும் இருக்கின்றது. அரச குடும்பத்தினருக்கென்று தனி பட்டங்கள், பதவிகள் என அனைத்தும் இருந்தாலும் வருமானம் எப்படி கிடைக்கிறது என்று பலரும் சிந்தித்துள்ளனர். அதற்கான விடையை இங்கு பார்க்கலாம்.
- எந்த ஒரு நாட்டின் அரச குடும்பமாக இருந்தாலும் அவர்களுக்கு நாட்டு மக்கள் செலுத்தும் வரிப்பணம் தான் பெரும்பான்மையான வருமானத்தை கொடுக்கிறது.
- ராஜ குடும்பத்தினருக்கு இருக்கும் சொத்துகள் மூலம் பெருமளவு வருமானம் கிடைக்கும்.
- பிரிட்டன் ராஜ குடும்பத்தினர் தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதால் அந்த நிறுவனங்களின் மூலம் அவர்களுக்கு வருமானம் கிடைக்கும்.
- துபாய் இளவரசர் எண்ணெய் வளங்களில் முதலீடு செய்துள்ளதால் அதன் மூலம் வருமானம் கிடைக்கும்.
- எப்பொழுதுமே நிலம் என்பது மிகச்சிறந்த முதலீடு அது ராஜ குடும்பத்தினருக்கு அதிகமாகவே இருக்கிறது.எனவே அதன் மூலம் அவர்களுக்கு அதிகளவில் வருமானம் கிடைக்கும்.
- ராஜ குடும்பத்தை சேர்ந்த ஒருவர் எழுதிய புத்தகத்திற்கு தனி மரியாதை உண்டு அதன் மூலம் அவர்கள் வருமானத்தை பெற முடியும்.
- மேலும் அரண்மனையை சுற்றி பார்க்க வரும் பயணிகள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஏதாவது ஒரு பொருளை வாங்கினால் அந்த பணமும் அரச குடும்பத்திற்கே கிடைக்கும் .