Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விண்ணப்பிக்க கால அவகாசம்…. செய்திக் குறிப்பில் வெளியீடு…. ஆட்சியரின் தகவல்….!!

மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டித்திருப்பதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கலெக்டர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியதாவது, தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும், அரசு பள்ளி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 11-ஆம் வகுப்பு முதல் பி.எச்.டி படிப்பு வரை படிக்கும் கிறிஸ்துவர், சீக்கியர், புத்த, பார்சி, இஸ்லாமிய மதங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளிடம் இருந்து 2021-2022 ஆம் வருடத்திற்கு மத்திய அரசின் பள்ளி மேற்படிப்பு வருவாய் மற்றும் தகுதி அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு www.scholarships.gov.in இந்த இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்க வருகின்ற 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தகுதியுள்ள சிறுபான்மையின மாணவ,மாணவிகளின் விண்ணப்பத்தை சரிபார்ப்பதில் சுணக்கம் காட்டும் கல்வி நிலையங்களின் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவ்வாறு பள்ளி படிப்பு உதவித்தொகை வரப்பெற்றுள்ள விண்ணப்பங்களை வருகின்ற 15-ஆம் தேதிக்குள், பள்ளி மேற்படிப்பு மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வேண்டி வரப்பட்டுள்ள விண்ணப்பங்களை வருகிற 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பின்னர் கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம். மேலும் தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ-மாணவிகள் குறித்த காலத்திற்குள் விண்ணப்பித்து பயனடையலாம் என கலெக்டர் கூறியுள்ளார்.

Categories

Tech |