Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அகற்ற வேண்டும்…. விதிமுறைகள் வெளியீடு…. ஆட்சியரின் உத்தரவு….!!

அரசியல் கட்சி சின்னங்கள் மற்றும் பேனர்களை அகற்றுமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளுக்கும் மற்றும் 3 பேரூராட்சிகளுக்கும் அடுத்த மாதம் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கப்படுகிறது. பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக வந்துள்ளது.

இதனையடுத்து இம்மாவட்டத்திலிருக்கும் 4 நகராட்சிகள் மற்றும் 3 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 5 கிலோ மீட்டர் பரப்பளவிற்கு அரசியல் கட்சி சார்ந்த விளம்பர பேனர்கள் மற்றும் கட்சி சின்னங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |