அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று கலெக்டர் கேட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா சென்று அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மருத்துவ அலுவலர் செல்வகுமார் மற்றும் சிவசுப்பிரமணியன், டேவிட் விமல்குமார், பார்த்திபன் போன்ற மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளார். இதனையடுத்து அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு அமைப்பதற்கும், கூடுதல் கட்டிடங்கள் அமைப்பது குறித்து செந்தில்குமார் எம்.எல்.ஏ.விடம் கேட்டறிந்துள்ளார்.
இதனைதொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக கூடுதல் நிதி ஒதுக்கி தரும்படி கலெக்டர் கேட்டுள்ளார். அதன்பின் கலெக்டர் அமர் குஷ்வாஹாவிடம் மருத்துவமனையில் கூடுதலாக கழிப்பிட வசதிகளை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து தரும்படி எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார். அப்போது முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் அவருடன் இருந்தனர்.