Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நோயாளி படுகையில் நாய்…. பொதுமக்கள் அச்சம்…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை….!!

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்களின் வார்டில் நாய் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் இங்கு 100-க்கும் அதிகமான உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கின்றது.

இதில் அரசு மருத்துவமனையில் குப்பை கழிவுகளை அகற்றுவது இல்லை எனவும், கால்வாய்களை தூர்வாரவில்லை என்றும், இரவு நேரங்களில் மின் விளக்குகளை போடுவதில்லை என்று பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் வார்டில் நாய் ஒன்று சுதந்திரமாக சுற்றி வருவதும், புற்றுநோயாளிகள் படுக்கக் கூடிய படுக்கையில் நாய் படுத்து தூங்குவதும், பொதுமக்களை அச்சுறுத்துவதும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது பற்றி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, கர்ப்பிணிகள் பிரிவில் பிறந்த பச்சிளம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுடன் உதவிக்குக் கூட வரும் முதியோர்கள் ஆகியோர் இருக்கின்றனர். இதனை அடுத்து பொதுமக்கள் அச்சத்துடன் சிகிச்சை பெற்று வரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் கவனமுடன் செயல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |