Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இங்கு அரசு மேல்நிலை பள்ளி அமைக்க…. முதல்வர் உத்தரவு…. நன்றி தெரிவித்த மக்கள்….!!

நீடாமங்கலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைப்பதற்கு தமிழக முதல்வர்  உத்தரவின்படி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக உயர்த்த வேண்டியதன் அவசியம் குறித்து நாளிதழ்களில் செய்தி பரவியது. இந்த செய்தியை திருவாரூரில் தங்கியிருந்த தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் படித்துள்ளார். அதன்பின் முதல்வர் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை அழைத்து பத்திரிக்கை செய்தியின் அடிப்படையில் நீடாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியை ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட்டார்.

அதன்படி தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் இந்த விவரத்தை கூறி உரிய அறிக்கை அனுப்ப கேட்டுக்கொண்டார். இதனால் திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், கல்வி அதிகாரி மணிவண்ணன், உதவி திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் நீடாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சென்றுள்ளனர். அப்போது ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ் செல்வன், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அப்பாவு போன்றோருடன் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

எனவே உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினால் புதிதாக  கட்டிடம் கட்ட சுமார் 3 ஏக்கர் நிலம் தேவை என அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு பொதுமக்கள் பங்களிப்புடன் இடத்திற்கான ஏற்பாடுகளை செய்வது என பெற்றோர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆகவே நீடாமங்கலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து பாராட்டினர்.

Categories

Tech |