நீண்ட காலமாகவே சம்பள உயர்வுக்காகக் காத்திருந்த அரசு ஊழியர்களுக்கு சந்தோசம் தரும் வகையில் அண்மையில்தான் அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதாவது அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 % உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இரட்டை மகிழ்ச்சி தரும்வகையில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மேலும் உயருவதாக தகவல் வெளியானது. எனினும் இது தொடர்ப்பன அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், 2022 ஜனவரியில் மேலும் 3 சதவீத உயர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி 34 % அகவிலைப்படி கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.
அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் ரூ.18,000 என வைத்துக்கொண்டால் 34% அகவிலைப்படியில் ரூ.6,120 கூடுதலாகக் கிடைக்கும்.
அதாவது அவர்களுடைய வருடாந்திர சம்பளம் ரூ.6,480 அதிகரிக்கும்.
அடிப்படை சம்பளம் = 18,000 ரூ
31 சதவீத அகவிலைப்படி = 5,580 ரூ (மாதம்)
34 சதவீத அகவிலைப்படி = 6,120 ரூ (மாதம்)
வித்தியாசம் = 61,20 ரூ – 5,580 ரூ = ரூ.540
வருடாந்திர சம்பள உயர்வு = 540 x 12 = 6,480 ரூ
அடிப்படை சம்பளம் = 56,900 ரூ
31 சதவீத அகவிலைப்படி = 17,639 ரூ (மாதம்)
34 சதவீத அகவிலைப்படி = 19,346 ரூ (மாதம்)
வித்தியாசம் = 19,346 ரூ – 17,639 ரூ = 1,707 ரூ
வருடாந்திர சம்பள உயர்வு = 1,707 x 12 = 20,484 ரூ