Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே?…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக அரசு ஊழியர்களால் முழுமையாக வேலை பார்க்க முடியவில்லை. அதனால் தற்போது அவர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. அதாவது வேலையை முழுமையாக செய்யாத நாளுக்கும் சேர்த்து பணி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அனைத்து தொழில் நிறுவனங்களில் 48 மணி நேரம் வீதம் வாரத்துக்கு 6 நாட்கள் வேலை நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆனால் அரசு அலுவலகங்களில் தற்போது வாரத்துக்கு 5 தினங்கள் மட்டுமே பணி நாளாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஒரு நாளுக்கான வேலை நேரத்தை அரசு அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது.

அதன்படி 48 மணி நேரத்தை ஈடு செய்யும் வகையில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என்று வாரத்துக்கு 4 நாட்கள் மட்டும் ஊழியர்கள் வேலை பார்த்தால் போதும், மீதம் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்படும். அதுமட்டுமின்றி அந்த விடுமுறை நாளுக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் அரசு ஊழியர்கள் அனைவராலும் 12 மணி நேரமாக தொடர்ந்து வேலை பார்க்க முடியாது. அதனால் இதனை அரசு ஊழியர்களிடம் ஒப்புதல் பெற்று பின் செயல்படுத்த வேண்டும்.

மேலே குறிப்பிட்டவற்றை எல்லாம் உள்ளடக்கி தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு அதன்பின் மசோதா தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மசோதா அடுத்த மாதத்துக்குள் தயாரிக்கப்பட்டு மத்திய அமைச்சரவைக்கு ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்படும். இதனைத்தொடர்ந்து பார்லி பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்படும். இதனை 2022 முதல் 23 ஆம் ஆண்டில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்த இருப்பதாகவும் ஆலோசித்து வருவதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சக உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |