கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி(DA) மற்றும் DR தொகை உயர்த்தப்பட்ட பின், அவர்களுக்கு மற்றொரு சலுகையும் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது கொரோனா தொற்று காரணமாக குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகையை(CEA) கோர முடியாமல் இருந்த ஊழியர்கள் தற்போது இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக மாதந்தோறும் 2,250 செலுத்த உரிமை கோர முடியும்.
ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசு ஊழியர்கள் உரிமை கோர முடியவில்லை. இந்நிலையில் கல்வித்துறை பணியாளர்கள் மற்றும் பயிற்சி அலுவலகம் ஜூலை மாதம் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் CEA உரிமை கோரல்கள் சுய அறிக்கை அல்லது முடிவு, அறிக்கை அட்டை, எஸ்எம்எஸ், கட்டணம் செலுத்திய மின்னஞ்சலின் பிரிண்ட் அவுட் வாயிலாகவும் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் இந்த வசதி மார்ச் 2020 மற்றும் மார்ச் 2021 முடிவடையும் கல்வி வருடங்களில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு குழந்தைக்கு மாதம் 2,250 ரூ என்ற வீதத்தில் 2 குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெற உரிமை உண்டு. இதில் 2-வது குழந்தை இரட்டை குழந்தையாக இருந்தால் இந்த உதவித்தொகை முதல் மற்றும் இரண்டாவது குழந்தையின் கல்விக்காக வழங்கப்படும். இதன் மூலமாக ஊழியரின் வருமானம் 4,500 ரூ அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு மத்திய அரசு ஊழியர்கள் பள்ளி சான்றிதழையும், கோரிக்கை ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும், மேலும் குழந்தையின் அறிக்கை அட்டை, சுய சான்றளிக்கப்பட்ட நகல் மற்றும் கட்டண ரசீது போன்றவையும் CEA கோரிக்கைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.