Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் திடீர் குறைப்பு….அரசு அதிரடி அறிவிப்பு

கேரளாவில் கொரோனோ தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பல சலுகைகள் வழங்கப்பட்டிருந்தது.  அதன்படி 14 நாட்கள்  சம்பளத்துடன் கூடிய சிறப்பு விடுமுறைகள் அளிக்கப்பட்டிருந்தது.                                                                                                                                                                                                                               அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல் நிலை மோசமாகி சிகிச்சை பெறுபவர்களுக்கும், மருத்துவமனை ஆவணங்களின் அடிப்படையில் சிகிச்சை காலம் முடியும் வரை சம்பளத்துடன் கூடிய சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது . இந்நிலையில் அரசு ஊழியர்களுக்காக வழங்கப்பட்டு வந்த  சிறப்பு சலுகைகளில்  கேரள அரசு சில மாற்றங்களை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது .  7 நாட்கள் தனிமை முடிந்த பிறகுகொரோனா பரிசோதனையில்  நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் , உடனே அலுவலகத்தில்  ஆஜராக வேண்டும்.  மேலும் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் ஊழியர்களுக்கும் கடந்த மூன்று மாதத்தில் பாதிக்கப்பட்டு அதன் பிறகு  குணமாகி இருந்தால், அவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |