Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற அரசு ஊழியர்…. வழிப்பறியில் ஈடுபட்ட இருவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

அரசு ஊழியரிடம் நகை பறித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் பகுதியில் சுப்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இவர் நாகர்கோவிலில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தேவியும் அவரது பக்கத்து வீட்டில் உள்ள ஒரு பெண்ணும் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது தச்சநல்லூர் ரயில்வே மேம்பாலம் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தேவியின் கழுத்தில் கிடந்த கவரிங் நகையை தங்கம் என நினைத்து பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து நெல்லை டவுன் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் நெல்லை சந்திப்பு பகுதியில் வசிக்கும் மகாராஜன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் நகையை பறித்து சென்றது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |