Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. அரசு செம சூப்பர் அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 1998-ஆம் ஆண்டு இங்கு அரசு ஊழியர்களுக்கு பண்டிகை காலத்தை முன்னிட்டு முன்பணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக பண்டிகைக்கால முன்பணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கர்நாடக மாநில அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மாநில அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதை மாநில அரசு பரிசீலித்து முன்பணம் தொகையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக மாநில நிதிதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக முன்பணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மாநில அரசு ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்ததை அடுத்து 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த பண்டிகைக்கால முன்பணத் தொகை தற்போது 25 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. ஐ.ஏ.எஸ்., கே.ஏ.எஸ்., உட்பட அனைத்துத் துறை அரசு ஊழியர்களும் இந்த சலுகையை பெற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கர்நாடக மாநில அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் ஷடாக்ஷரி 5.25 லட்சம் அரசு ஊழியர்கள் இந்த திட்டத்தின் மூலமாக பயன் பெறுவார்கள் என்றும் கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 1.29 லட்சம் அரசு ஊழியர்கள் பண்டிகைக்கால முன்பணத் தொகையை பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இதன் மதிப்பு 129 கோடி ரூபாய் என்றும் தெரிவித்துள்ளார். பண்டிகை காலம் முன்பணத் தொகை மாநில அரசு ஊழியர்களுக்கு வட்டியில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இதை 10 தவணைகளில் திருப்பி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |