ரஷ்யாவின் தலைநகரிலுள்ள அரசு அலுவலகம் ஒன்றிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரஷ்யாவின் தலைநகரமாக மாஸ்கோ திகழ்கிறது. இந்த மாஸ்கோவில் செயல்பட்டு வரும் அரசு பொது சேவை அலுவலகம் ஒன்றிற்குள் திடீரென மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார்.
அவ்வாறு புகுந்த அந்த மர்மநபர் அங்கிருந்த ஊழியர்களின் மீது அதிரடியாக துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார். அந்த அதிபயங்கர தாக்குதலில் சிக்கி 2 பேர் பரிதாபமாக இறந்துள்ளார்கள்.
அதோடு மட்டுமின்றி இந்த தாக்குதலினால் சிறுமி உட்பட 4 பேர் படுகாயமடைந்ததையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.