கரூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியைகளிடம் மர்ம நபர்கள் கத்தி முனையில் 14 சவரன் நகையை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏழூர் சேத்துப்பட்டில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வரும் மணிமேகலை மற்றும் உதவி தலைமை ஆசிரியை ரமா, பிரியா ஆகிய இருவரும் பள்ளியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் இருவர் கத்தியை காட்டி மிரட்டி ரமா, பிரியாவின் கழுத்தில் இருந்த 7 சவரன் நகையை பறித்துக் கொண்டனர்.
நகையை தர மறுத்த மணிமேகலையின் முகத்தில் கத்தியால் கீறி காயப்படுத்திவிட்டு வலுக்கட்டாயமாக தாலி கொடியை பறித்துக் கொண்டு இருவரும் தப்பிச் சென்றனர். தகவலறிந்து நேரில் சென்ற போலீசார். அதில் வழிப்பறி சம்பவம் நடந்த பத்து நிமிடத்திற்கு முன் அந்த வழியாக இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் சென்ற பதிவாகியிருந்தது. அந்த சிசிடிவி பதிவை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.